Managing Director’s Desk

This is my immense pleasure to give a cup of talk about the institute. I have a huge experience in this industrial field. I worked as a principal in Oscar Institute of catering Sivakasi, Srivilliputhur, Kovilpatti and Thoothukudi. Under my vision this industrial school started in Vilathikulam in the year of 2015.since this area lacks such industrial school our staff members creates awareness among the students and parents. We highlight the opportunities of employability. Our primary mission is to impart quality education to this area. Industrial school helps to uplift the society and enhance employability of this remote area. Our institution gives adequate opportunity to improve their communication skills.

We have experienced staff members to handle the classes. We provide a comprehensive set of laboratories and training facilities. The ambience of the institution cultivates higher standard and provides a new opening.

Our Managing Director

தமிழ் கேட்டரிங் மற்றும் பாராமெடிக்கல் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் திரு. அழகு மணிகண்டன் அவர்கள் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் தனது கல்வியை தொடங்கினர். பள்ளி பருவத்திலேயே சிறு சிறு வேலைகள் செய்து படிப்பதற்குத் தேவையான செலவுகளை தானே பூர்த்தி செய்து கொண்டிருந்தார். அங்கும் இங்கும் கிழிந்திருக்கும் சட்டை மற்றும் கால்ச்சட்டை அணிந்து பள்ளிக்கு சென்றார். என்னதான் நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வறுமையை உணரவேண்டும் , பணத்தின் மதிப்பை உணர வேண்டும் என்று எண்ணிய இவர் விடுமுறை நாட்களில் சிறு வேலைகள் செய்வதன் மூலம் வரும் தொகையை சேமித்து தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார். தனது மகன் சரியான பாதையில் தான் பயணிக்கிறான் என்பதை உணர்ந்த இவரது பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தன்னுடைய இளநிலை உணவக மேலாண்மை பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சிறிய உணவு விடுதியில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு மேஜையை துடைத்தல் கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் வழங்கப்பட்டன. பட்டப்படிப்பு முடித்த நான் கழிவறை சுத்தம் செய்வதா என்று எண்ணியிருந்தால் இந்த உலகம் ஒரு தொழில் முனைவோனை, சேவகனை பிரசவிக்காமல் போயிருக்கும். சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தில் ஒரு உணவகம் ஒன்றை துவங்கினார். உணவில் சுத்தமும், தரமும் சிறிதும் குறைய கூடாது என்று கவனமாய் செயல்பட்டார். நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டு இருந்தது உணவகம். எந்த தொழில் முனைவோரைதான் விட்டுவைத்தது இந்த துரோகம். நிறுவனத்தின் முதுகெலும்பில் ஈட்டி பாய சுருண்டு  விழுந்தது. வாழ்க்கை மீண்டும் சுழியத்தில் போய் நின்றது.

” தோற்றவனின் கண்ணீரை விட துரோகத்தால் வீழ்ந்தவனின் கண்ணீரின் அடர்த்தி அதிகம்”

அனாதையாய் எரிந்த ஆஸ்திரேலிய காடுகள் மீண்டும் துளிர்ப்பதை போல வாழ்க்கை துளிர்விட தொடங்கியது।  கோவில்பட்டியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் உணவக மேலாண்மை துறையில் ஆய்வக உதவியாளராக பணியை தொடங்கினார்। அவரின் திறமையை உணர்ந்த கல்லூரி நிர்வாகத்தினர் பின்னாளில் உதவி பேராசிரியராக பதவி உயர்வு அளித்தனர். அவரின் நேர்மையையும் கடின உழைப்பையும், விடாமுயற்சியும் அதே கல்லூரியில் முதல்வர் இருக்கையை பெற்றுத்தந்தன. ஆண்டுகள் கழிய சேமித்து வைத்த பணத்தையும், வங்கி கடனையும் பெற்று கல்லூரி ஒன்றை நிறுவினார்। தன தாயின் மீதும் தாய்தமிழ் மீதும் கொண்ட பற்றால் தன் கனவுக்கல்லூரிக்கு  தமிழ் என்றே பெயர் சூட்டினார்.

” பசியில் வாழ்பவனுக்கு மட்டுமே தெரியும் ரொட்டி துண்டின் சுவை “

கல்வி கற்க தனக்கு ஏற்பட்ட பொருளாதார சிரமம் மற்றவர்களுக்கும் வந்துவிடக்கூடாது. வறுமையால் யாருடைய கல்வியும் இடையில் நின்று விடக்கூடாது என  நினைத்தார். கல்லூரி தொடங்கிய ஆண்டிலிருந்து இன்றுவரை ஆண்டிற்கு 30 மாணவர்கள் வரை கல்விக்கட்டணம் வசூலிக்காமலும், பல மாணவர்களுக்கு  குறைந்த கல்வி கட்டணம் வசூலித்தும் கல்வி வழங்கி வருகிறார். தனது இலட்சியத்தின் அடுத்த கட்ட நகர்வை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

“கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்கவிட்டால் கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை”.

என்ற வரிகளுக்கு ஏற்ற படி கடன் சுமைகளை கூட நான் தாங்கி கொண்டு நின்றாலும் பரவாயில்லை நீங்கள் படித்தால் போதும் என்ற விடயங்களை மனதில் பதிய வைத்து பலரின் கனவுகளையும் தன் கனவுடன் சேர்த்து சுமை நடை போட்டு கொண்டு இருக்கிறார். முதியோர் இல்லம், அனாதை இல்லம் மற்றும் இலவச மருத்துவமனை கட்டி இலவச மருத்துவம் வழங்குதல் போன்ற பொது சேவைகள் அடியெடுத்து வைத்துள்ளார்.

வாழ்க்கையில் ‘வலி’களும் உண்டு, ‘வழி’களும் உண்டு

பலரது வலிகளை போக்குவதற்காக பல வலிகளை தாங்கி நிற்கிறோம். தங்களிடம் இந்த வலிகளை போக்குவதற்காக வழி இருந்தால், எங்களது கல்வி நிறுவனத்தின் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும், அதன் உள்ளே இருகரம் கூப்பிய நிலையில் நாங்களும் இருக்கிறோம், உங்களது உதவிகள் வரவேற்கப்படுகின்றன!

” உலகின் கடைசி உயிர் மரணிக்கும் வரை யாருமிங்கு அனாதையில்லை அன்பை அனைவருக்கும் பகிர்ந்தளித்தால் அனாதையில்லம் தேவையில்லை”

தாய்க்கு நன்றி….! தாய்தமிழுக்கு நன்றி…!

Mr. Alagu Manikandan is the Founder of “Tamil Institute of Science and Management”.  He was born in a small village and started his education in a government school. By the time he was a teenager, he had been doing little jobs to help his studies financially. He went to school wearing torn shirt and trousers. Being born in a middle-class family, his parents wanted him to feel poverty and the value of money. His parents were fully cooperative, realizing that their son was on the right path.

He completed his undergraduate hotel management degree at a private college in Coimbatore. After completing his course he joined in a small restaurant for job, he was offered with jobs such as clearing the table and cleaning the toilets. If I had graduated and considered cleaning the toilet, the world would not have seen an entrepreneur and a service minded person. He started a restaurant with his small savings. He was careful not to diminish the cleanliness and quality of the food. The restaurant was operating in good profit. This is the betrayal of any entrepreneur. The spear in the company’s spine was curled up. Life was back in the loop. 

“Tears of betrayed person

Is more painful than

Tears of failed one”

His life began with a new journey like How the Australian forest started to blossom after fire. He joined as a Laboratory Assistant in a Private Educational Institute in Kovilpatti. After recognizing his talent, the college administration later promoted him to Assistant Professor. His honesty, hard work and perseverance earned him the position of principal of the same college. He founded a college after years of saving money and bank loans. He loved his mother as such he loved his mother tongue so he named their name to his dream college.

“The most starving person only knows the taste of  a bread”

The financial difficulties of his education should not be passed on to others. He thought that poor people’s education should not be stopped by poverty. From the beginning of the year to date, the college has been paying tuition fee up to 30 students, we are providing free education to the poor people and for many students we are asking them to pay only low tuition fee. He is moving towards the next phase of his ambition.

 “If you don’t respect the visible man

Then it’s useless of respecting the invisible God”

It’s nothing even if I bear the burden of debt for our students. We together can win the poverty. He is carrying your dreams, with his dream. He is going to initiate general services such as rehabilitation of elderly, orphanage and free hospital soon.

“In life,There are pains too

There are ways too”

We bear many pains to relieve the pain of many. If you have a way to alleviate these pains, the doors of our institute will always be open for you and you can see us welcoming you inside the doors. Your helps are welcome! 

“The last survival of the world, until death, No one is orphaned

Love everyone, if you do so ….. No need of orphanages”

 

Thanks to Mother! TAMIL !!

Open chat
Hai
Powered by